Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உணவு விநியோக ஓட்டுநரின் உன்னத முயற்சியால், சிறார் புற்றுநோய் அறநிறுவனத்துக்குத் திரண்ட $75,000 நன்கொடை

நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நடப்பில் உள்ள காலத்தைப் பயனுள்ள வழியில் செலவிடத் திட்டமிட்டார் திரு. அந்தோணி ஹௌலஹான்(Anthnoy Houlahan). 

வாசிப்புநேரம் -

நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நடப்பில் உள்ள காலத்தைப் பயனுள்ள வழியில் செலவிடத் திட்டமிட்டார் திரு. அந்தோணி ஹௌலஹான்(Anthnoy Houlahan).

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறாருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது.

பகுதிநேர உணவு விநியோக ஓட்டுநராகப் பணிபுரிந்து அதில் கிடைக்கும் முழுத் தொகையைச் சிறார் புற்றுநோய் அறநிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்க முடிவெடுத்தார்.

பிரிட்டனைச் சேர்ந்த அவர் இதுவரை, 75,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையைத் திரட்டியுள்ளார்.

பகுதி நேர ஓட்டுநராகப் பணிபுரிந்து அவர் ஈட்டும் தொகை மிதமானதே என்றபோதும் மற்றவர்கள் அவரது செயலைக் கண்டு நன்கொடையாகப் பணத்தை வாரி வழங்கினர்.

100,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையைத் திரட்டுவது அவரது இலக்கு.

ஏப்ரல் 22ஆம் தேதி, திரு. அந்தோணியின் பயணம் தொடங்கியது.

மாலை நேரத்திலும், வார இறுதி நாள்களிலும், வாரத்திற்கு 20 முதல் 25 மணி நேரம்வரை வேலை செய்கிறார். மற்ற நாள்களைவிட சனிக்கிழமைகளில் கூடுதல் நேரம் வேலை செய்கிறார்.

இம்மாதம் 22ஆம் தேதி வரை பகுதிநேர உணவு விநியோக ஓட்டுநராகப் பணிபுரியத் திட்டமிட்டுள்ளார் திரு. அந்தோணி.

வரும் நாள்களில் ஓட்டுநராக 4,000 வெள்ளி வரை சம்பாதிக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்