Images
  • bus
    கோப்புப் படம்

ஒட்டுமொத்தமாக வாடகைக்கு எடுக்கப்படும் பேருந்துச் சேவை நிறுவனங்களின் மின்னிலக்க உருமாற்றத்துக்குக் கூடுதல் ஆதரவு

சிங்கப்பூரில் ஒட்டுமொத்தமாக வாடகைக்கு எடுக்கப்படும் பேருந்துச் சேவை நிறுவனங்களின் மின்னிலக்கமயமாதலுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்படவுள்ளது.

அதன் தொடர்பில், நிலப் போக்குவரத்துத் துறைக்கான மின்னிலக்கத் திட்டத்தின் உத்திகள் இன்று வெளியிடப்பட்டன.

திட்டத்தின் கீழ்,அத்தகைய சேவை வழங்கும் நிறுவனங்கள், புதிய தீர்வுகள், ஊழியர்களுக்கான பயிற்சிகள் ஆகியவை தொடர்பில் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.

நோய்ப்பரவல் சூழலில் சுற்றுப்பயணங்களும், பள்ளி நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்தமாக வாடகைக்கு எடுக்கப்படும் பேருந்துச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

புதிய அறிவார்ந்த கட்டமைப்பு, பேருந்து வழிகளைத் திட்டமிட உதவுவதோடு, மின்னிலக்கக் கட்டண அம்சங்களையும் கொண்டிருக்கும்.

பணத்தையும் நேரத்தையும் சேமிக்கவும் அது உதவும்.

அத்தகைய அறிவார்ந்த தீர்வுகள், சேவைத் தரத்தையும், செயல்பாட்டுத் திறனையும் மேம்படுத்துமென போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் சீ ஹொங் டாட் (Chee Hong Tat) கூறினார்.

புதிய திட்டத்தில் கலந்துகொண்டு, அவற்றின் வர்த்தகத்தை உருமாற்றும்படி, ஒட்டுமொத்தமாக வாடகைக்கு எடுக்கப்படும் பேருந்துச் சேவைத் துறையில் உள்ள 3,500க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் திரு. சீ வலியுறுத்தினார். 

Top