Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நிறுவனத்தைப் பலநாள் ஏமாற்றியவர்கள் ஒருநாள் அகப்பட்டனர்

நிறுவனத்தின் குத்தகைதாரர்களிடமிருந்து 7 ஆண்டுகளாகக் கையூட்டு பெற்றுவந்த இருவர் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: நிறுவனத்தின் குத்தகைதாரர்களிடமிருந்து 7 ஆண்டுகளாகக் கையூட்டு பெற்றுவந்த இருவர் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

SMM நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி, 59 வயது ஓங் கா ஹெங் (Ong Kah Heng) 2005க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலத்தில் 111 முறை Daycon, A-One நிறுவனங்களுக்குச் சேரவேண்டிய கட்டணத்தில் ஒரு பங்கை எடுத்துக்கொண்டார். அவ்வாறு 1 மில்லியன் வெள்ளி தொகையைத் தவறுதலாக SMM நிறுவனம் கட்டணமாகச் செலுத்தியது.

ஓங்குடன் கூட்டாக மோசடி செய்த Daycon நிறுவனத்தின் இயக்குநர், 52 வயது யாப் கோக் லியோங் (Yap Kok Leong), SMM நிறுவனத்திடம் பெற்ற கட்டணங்களில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டார். அவ்வாறு அவர் முறைகேடாகப் பெற்ற கட்டணங்களின் தொகை சுமார் 1 மில்லியன் வெள்ளி.

சிங்கப்பூர் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு இத்தகைய நடவடிக்கைகளைக் கடுமையாய்க் கண்டிப்பதாகக் கூறியது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பபடுவார்கள் என்று அது சொன்னது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்