Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஒருங்கிணைந்த உல்லாசத் தளங்களின் விரிவாக்கப் பணிகளால் சிங்கப்பூரர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும்

Resorts World Sentosa, Marina Bay Sands போன்ற ஒருங்கிணைந்த உல்லாசத் தளங்கள் காணவிருக்கும் விரிவாக்கப் பணிகளில் சிங்கப்பூரர்களுக்கும் உள்ளூர் நிறுவனகளுக்கும் அதிக வேலை வாய்ப்புகள் அமையும்.  

வாசிப்புநேரம் -
ஒருங்கிணைந்த உல்லாசத் தளங்களின் விரிவாக்கப் பணிகளால் சிங்கப்பூரர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும்

(படம்: Las Vegas Sands)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

Resorts World Sentosa, Marina Bay Sands போன்ற ஒருங்கிணைந்த உல்லாசத் தளங்கள் காணவிருக்கும் விரிவாக்கப் பணிகளில் சிங்கப்பூரர்களுக்கும் உள்ளூர் நிறுவனகளுக்கும் அதிக வேலை வாய்ப்புகள் அமையும்.

வர்த்தக, தொழில்துறைக்கான மூத்த துணை அமைச்சர் திரு சீ ஹொங் டாட், சுற்றுப்புறத் துறை மாநாட்டில் அவ்வாறு கூறினார்.

$9 பில்லியன் செலவில் விரிவாக்கம் காணவிருக்கும் இரு ஒருங்கிணைந்த உல்லாசத் தளங்கள், சிங்கப்பூரின் சுற்றலாத் துறையை மேம்படுத்துவதுடன், உலக அளவில் சிங்கப்பூரை ஒரு வர்த்தக மையமாகவும் வலுப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

Marina Bay Sands ஹோட்டலில் சன்னல் கண்ணடிகளைப் பொருத்தும் பணியில் ஈடுபட்ட Diamond Glass நிறுவனத்தையும், Resorts World Sentosa ஹோட்டலில் உணவுப் பொருள் விநியோகம் செய்யும் Vismark Food Industries எடுத்துக்காட்டுகளாகச் சுட்டினார் திரு. சீ.

சிறிய, நடுத்தர நிறுவனங்களான அவை ஒருங்கிணைந்த உல்லாசத் தளங்களில் பணியாற்றியதில் அவற்றின் ஊழியர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

இரண்டு உல்லாசத் தளங்களும் இணைந்து, 2018இல் வழங்கிய குத்தகைகளில் 80 விழுக்காடு உள்ளூர் நிறுவனங்களுக்குச் சென்றது.

அவற்றின் மொத்த மதிப்பு, சுமார் 1.1 பில்லியன் வெள்ளி என்று கூறினார் திரு. சீ.

அடுத்து வரும் விரிவாக்கப் பணிகளால், அந்தத் தொகை மேலும் அதிகரிக்கும் என்று நம்புவதாக அவர் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்