Images
  • chee hong tat (1)

'இந்தியாவுடனான வர்த்தகத்தில் சிங்கப்பூர் நிறுவனங்களுக்குப் பலன்': அமைச்சர் சீ ஹோங் டாட்

இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளில், பல துறைகளில் கிடைத்த வர்த்தக வாய்ப்புகள் மூலம் சிங்கப்பூர் நிறுவனங்கள் பயனடைந்துள்ளதாக வர்த்தகத்துக்கான மூத்த துணை அமைச்சர் சீ ஹோங் டாட் கூறியிருக்கிறார்.

அதேபோல, இந்திய நிறுவனங்களும் சிங்கப்பூரின் வர்த்தகச் சூழலைப் பயன்படுத்தி ஆசியான் வட்டாரத்துக்குள் நுழைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மரினா பே சாண்ட்ஸ் மாநாட்டு நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற சிங்கப்பூர், இந்தியப் பொருளியல் தொடர்பான அமைச்சர்நிலைக் கூட்டத்தில் அவர் பேசினார்.

பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பது, வறுமையைக் குறைப்பது, நீடித்த வளர்ச்சியைக் கொண்டிருப்பது போன்றவை, அனைவரும் எதிர்நோக்கும் சவால்கள்.

அவற்றைக் கையாள மற்றவர்களுடன் கூட்டாகப் பணியாற்றுவது அவசியம் என்றார் திரு சீ.

இந்தியாவையும் சிங்கப்பூரையும் உள்ளடக்கும் R-CEP எனும் வட்டார விரிவான பங்காளித்துவ உடன்பாடு அதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்றார் திரு சீ.

R-CEP உடன்பாடு குறித்த பேச்சு தொடங்கியது முதலே, இந்தியாவை அதில் இணைத்துக்கொள்ளவேண்டியது முக்கியம் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது சிங்கப்பூர்.

இந்தியாவுக்கும் ஆசியானுக்கும் இடையிலான உறவுகளையும், தொடர்பையும் வலுப்படுத்தவும் அது வகைசெய்யும் என்று திரு சீ கூறினார்.

 

Top