Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செரியன் ஜார்ஜின் உரைக்கான அனுமதி தாமதமானதற்குக் கவனக்குறைவே காரணம்: தேசியப் பல்கலை

சிங்கப்பூர்: ஹாங்காங்கில் உள்ள கல்வியாளர் செரியன் ஜார்ஜ், தேசியப் பல்கலைக் கழகத்தில் உரையாற்ற அனுமதியளிப்பது கவனக்குறைவு காரணமாக தாமதமானது என்று பல்கலை தெரிவித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -
செரியன் ஜார்ஜின் உரைக்கான அனுமதி தாமதமானதற்குக் கவனக்குறைவே காரணம்: தேசியப் பல்கலை

(படம்: Hong Kong Baptist University/Mediacorp)

சிங்கப்பூர்: ஹாங்காங்கில் உள்ள கல்வியாளர் செரியன் ஜார்ஜ், தேசியப் பல்கலைக் கழகத்தில் உரையாற்ற அனுமதியளிப்பது கவனக்குறைவு காரணமாக தாமதமானது என்று பல்கலை தெரிவித்திருக்கிறது.

தேசியப் பல்கலைக்கழகத்தின் கலை, சமூக அறிவியல் பள்ளியில் உரையாற்றத் தமக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தாக சிங்கப்பூர்க் குடிமகனான பேராசிரியர் ஜார்ஜ் தமது வலைப்பதிவில் குறிப்பிட்டார்.

ஆனால் உரையாற்றவேண்டிய நாளன்றே (மார்ச் 9) அதற்கான அனுமதி கலை, சமூக அறிவியல் பள்ளிக்குக் கிடைத்தது. அதனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகப் பேராசிரியர் ஜார்ஜ் சொன்னார்.

கவனக்குறைவால் நடந்த தவறுககு வருந்துவதாகத் தேசியப் பல்கலைக்கழகம், சேனல் நியூஸ்ஏஷியாவிடம் தெரிவித்தது.

இம்மாதம் 28ஆம் தேதி பிற்பகல் மற்றொரு நிகழ்ச்சிக்கு அவர் அழைக்கப்பட்டிருப்பதாகப் பல்கலை கூறியது. அதனைத் தாம் ஏற்றுக்கொண்டதாகவும் பேராசிரியர் ஜார்ஜ் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்