Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

CHIJ உயர்நிலைப் பள்ளி மாணவிக்குக் கிருமித்தொற்று - வீட்டிலிருந்து பயிலும் நடைமுறைக்கு மாறியது பள்ளி

CHIJ உயர்நிலைப் பள்ளி (தோ பாயோ) மாணவிக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

CHIJ உயர்நிலைப் பள்ளி (தோ பாயோ) மாணவிக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதை அடுத்து, பள்ளி மாணவர்கள் இன்று முதல் வீட்டிலிருந்து பயிலும் நடைமுறைக்கு மாறுகின்றனர்.

குடும்ப உறுப்பினர் மூலம் அந்த மாணவிக்குக் கிருமி தொற்றியதாக TODAY கூறியது.

பாதிக்கப்பட்ட மாணவி, கடைசியாகத் திங்கட்கிழமை (ஜூலை 19) பள்ளிக்குச் சென்றிருந்தார்.

வளாகத்தைக் கிருமிநாசினி கொண்டு முழுமையாகச் சுத்திகரிப்பதற்காக வீட்டிலிருந்து பயிலும் நடைமுறை செயல்படுத்தப்பட்டதாகப் பள்ளி குறிப்பிட்டது.

உயர்நிலை 2லிருந்து 5 வரை பயிலும் மாணவர்கள் நாளை (ஜூலை 23) பள்ளி திரும்புவர்.

உயர்நிலை 1-இல் பயிலும் மாணவர்கள், அடுத்த புதன்கிழமை (ஜூலை 28) பள்ளி திரும்புவர்.

பாதிக்கப்பட்ட மாணவியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் நலமாக இருப்பதாகவும், முன்னெச்சரிக்கையாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்