Images
  • child mom
    (படம்: Facebook / Claudia Kwan)

சிறுமியின் காதில் ஏற்பட்ட காயத்துக்குச் சகோதரர் காரணமில்லை - தாயார்

பாலர்பள்ளி ஆசிரியரிடம் தமது காதில் ஏற்பட்ட காயத்துக்குச் சகோதரர் காரணமென 3 வயது சிறுமி சொன்னதாகக் கூறப்பட்டதைத் தாயார் மறுத்துள்ளார்.

திருமதி களோடியா குவான் தமது Facebook பக்கத்தில் அது குறித்து பதிவு செய்திருந்தார்.


கடந்த மாதம் 14ஆம் தேதி தமது மகளைப் பள்ளியில் விட்டுச் சென்றபோது காயம் இல்லை என்று திருமதி குவான் வலியுறுத்தினார்.

சம்பவம் குறித்து பள்ளி ஆசிரியர்கள் விளக்கம் அளிக்கவில்லை என்று திருமதி குவான் சொன்னார்.

எனினும் சிறுமியின் கண்ணுக்குக் கீழும், காதிலும் இருந்த காயங்கள் வீட்டில் இருக்கும்போது ஏற்பட்டவை என்று ஆசியர்கள் நினைத்திருந்ததாக பாலர் பள்ளி சொன்னது.

அன்றாடம் செய்யப்படும் சுகாதாரப் பரிசோதனையில் சிறுமியின் கண்ணுக்குக் கீழ் உள்ள காயத்தை ஆசிரியர் கவனித்ததாகப் பள்ளி கூறியது.

வீட்டில் சகோதரரால் அந்தக் காயமேற்பட்டதாகச் சிறுமியின் தாயார் கூறியதாகத் தெரிவித்தது பள்ளி.

அதே நாள், இரண்டு மணி நேரம் கழித்து இன்னோர் ஆசிரியர் சிறுமியின் காதில் இருந்த காயத்தைக் கவனித்துள்ளார்.

அதற்கும் சகோதரரே காரணம் எனச் சிறுமி கூறியுள்ளார். 

அம்மாவும் பிள்ளையும் ஒரே மாதிரி விளக்கம் அளித்ததால், நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்றது பள்ளி. 

கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகள் சோதிக்கப்பட்டன. 

ஊழியர்களிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. 

அதன் முடிவில் பள்ளியில் சிறுமிக்குக் காயம் ஏற்பட்டதற்கான தடயம் ஏதும் தென்படவில்லை என்றது பள்ளி.

காவல்துறையிடம் செய்யப்பட்ட புகாரின் தொடர்பில் நடக்கும் விசாரணையில் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் பள்ளி தெரிவித்தது.

சிறுமி மறுநாளே பள்ளிக்குச் சென்று சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியாகக் கலந்துகொண்டதாகவும் பள்ளி சொன்னது.

ஆனால், தாயாரோ தம் மகள் பள்ளிக்குச் செல்ல அச்சப்படுவதாகக் கூறியிருக்கிறார்.


 

உங்கள் கருத்து

Top