Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குழந்தைப் பராமரிப்புக் கட்டணங்கள் குறையவிருக்கின்றன; 27,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைவர்

ECDA எனப்படும் குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்பின் Partner Operator எனும் பங்காளி நடத்துநர் திட்டத்தின் கீழ் குழந்தைப் பராமரிப்புக் கட்டணங்கள் குறையவிருக்கின்றன.

வாசிப்புநேரம் -
குழந்தைப் பராமரிப்புக் கட்டணங்கள் குறையவிருக்கின்றன; 27,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைவர்

(கோப்புப் படம்: AFP)

ECDA எனப்படும் குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்பின் Partner Operator எனும் பங்காளி நடத்துநர் திட்டத்தின் கீழ் குழந்தைப் பராமரிப்புக் கட்டணங்கள் குறையவிருக்கின்றன.

27,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூர்க் குழந்தைகள் அதன் மூலம் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பங்காளி நடத்துநர் திட்டத்தின் அடுத்த தவணைக் காலத்திற்கு மொத்தம் 324 குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய தவணைக் காலத்துடன் ஒப்பிடுகையில் அது 30 விழுக்காடு அதிகம் என அமைப்பு கூறியது.

புதிய 5 ஆண்டுத் தவணைக் காலத்திற்குத் தகுதிபெற்றிருக்கும் நிலையங்களுக்கு அமைப்பு நிதியாதரவு வழங்கும்.

குழந்தைப் பராமரிப்பு மற்றும் சிசுப் பராமரிப்புச் சேவைகள் எளிதாகக் கிடைப்பதையும் அவை கட்டுப்படியாக இருப்பதையும் அவற்றின் தரத்தையும் உறுதிசெய்ய அது உதவும்.

முழுநாள் குழந்தைப் பராமரிப்புக்கான மாதாந்தரக் கட்டண உச்சவரம்பு:

இதற்கு முன் - 800 வெள்ளி

இனி - 760 வெள்ளி.

சிசுப் பராமரிப்புக்கான கட்டண உச்சவரம்பு:

இதற்கு முன் - 1,400 வெள்ளி

இனி - 1,330 வெள்ளி 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்