Images
  • Children's Book Clubs (1)

சிறுவர்களுக்கான இருமொழி வாசிப்புத் திட்டங்கள்


தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவு, இரண்டு இருமொழி (தமிழ், ஆங்கிலம்) வாசிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

பல்வேறு நூல்களைச் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துவதோடு வாசிப்பில் பிள்ளைகளின் ஆர்வத்தையும் ஆற்றலையும் வெவ்வேறு நடவடிக்கைகளின்மூலம் வளர்ப்பதும் திட்டத்தின் நோக்கம்.

திட்டம் இரு மன்றங்களின் மூலம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அவற்றில் ஒன்றுல் புத்தகப் படையினர் மன்றம்.

இது 1இலிருந்து 10 வயதான மாணவர்களுக்கானது.

அங் மோ கியோ, பிடோக், குவீன்ஸ்டவுன் பொது நூலகங்களிலும் ஜூரோங், உட்லண்ட்ஸ் வட்டார நூலகங்களிலும் மார்ச் 10ஆம் தேதி மன்றம் தொடங்கவுள்ளது.

மற்றொன்று புத்தக நிஞ்ஜாக்கள் மன்றம்.

இது 1இலிருந்து 6 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கானது.

பிள்ளைகள் தங்களுடைய ஆரம்பகாலக் கல்வித் திறன்களை வளர்த்துக்கொள்ள இம்மன்றம் உதவும்.

பெற்றோர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு வாசித்தல், விளையாட்டுகள் ஆகியவற்றின்மூலம் எவ்வாறு ஆரம்பகாலப் கல்வியறிவை வளர்க்கலாம் என்பதை அறிந்துகொள்ளலாம்.

புக்கிட் பாத்தோக், செங்காங், செம்பவாங் பொது நூலகங்களில் மார்ச் 17ஆம் தேதி தொடங்கவிருக்கிறது மன்றம்.

மேல் விவரங்களுக்கு Read@nlb.gov.sg என்ற முகவரிக்குப் பொதுமக்கள் மின்னஞ்சல் அனுப்பலாம்.  

உங்கள் கருத்து

Top