Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் 367 பிள்ளைகளுக்குக் கிருமித்தொற்று

சிங்கப்பூரில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 367 பேர் பிள்ளைகள்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் 367 பிள்ளைகளுக்குக் கிருமித்தொற்று

(கோப்புப் படம்: CNA)

சிங்கப்பூரில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 367 பேர் பிள்ளைகள்.

அவர்களில் 172 பேர் டெல்ட்டா வகைக் கிருமியால் பாதிக்கப்பட்டதாகச் சுகாதார மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பேசிய அவர், உள்ளூரில் பதிவான ஒட்டுமொத்தக் கிருமித்தொற்றுச் சம்பவங்களில் 0.6 விழுக்காட்டினர் 12 வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகள் என்றார்.

அவர்களில் எவரும், உயிர்வாயு சிகிச்சையளிக்கும் அளவு மோசமாகப் பாதிக்கப்படவில்லை.

வரும் நாள்களில் சமூகத்தில் கிருமிப்பரவல் அதிகரிக்கலாம் என்பதால், இன்னும் கூடுதலான பிள்ளைகள் பாதிக்கப்படக்கூடும் என்று டாக்டர் ஜனில் எச்சரித்தார். 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்