Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆப்கானிஸ்தான் மீதான தடை உத்தரவுகளை அகற்றி, மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும்: சீனா

ஆப்கானிஸ்தான் மீதான தடை உத்தரவுகளை அகற்றி, அந்நாட்டுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு சீனா கேட்டுக்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -


ஆப்கானிஸ்தான் மீதான தடை உத்தரவுகளை அகற்றி, அந்நாட்டுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு சீனா கேட்டுக்கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் குறித்து இணையம் வழி நடத்தப்பட்ட G20 வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi) அந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

மனிதாபிமான உதவி அந்நாட்டுக்கு உடனடியாகத் தேவைப்படுவதாய் அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தான் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதற்குக் காரணமான நாடுகளை, ஆப்கான் மக்களின் பிரச்சினைகளைத் தணிக்க, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சீன வெளியுறவு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

சென்ற மாத நடுப்பகுதியில் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. நாடு, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலிபான் அமைப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

அப்போது முதல், அங்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவது குறித்து பேசப்பட்டுவருகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்