Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அமெரிக்கா, சீனா இடையே பழிவாங்கல் நடவடிக்கைகளால் அனைத்துலகளவில் அச்சுறுத்தல் : பிரதமர் லீ

அமெரிக்கா இராணுவ ரீதியிலும், மற்ற அம்சங்களிலும் வலுவாகத் திகழ்கிறது. சீனா வளர்ந்துவருகிறது.

வாசிப்புநேரம் -
அமெரிக்கா, சீனா இடையே பழிவாங்கல் நடவடிக்கைகளால் அனைத்துலகளவில் அச்சுறுத்தல் : பிரதமர் லீ

(படம்:Reuters/Carlos Barria)

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பழிவாங்கல் நடவடிக்கைகள் அனைத்துலக வளப்பத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகப் பிரதமர் லீ சியென் லூங் கூறியிருக்கிறார்.

அவ்விரு நாடுகளின் ஒருதலைப் பட்சமான நடவடிக்கைகள் பலதரப்பு வர்த்தகக் கட்டமைப்பைக் கீழறுப்பதாய் அமைந்துள்ளன; அதனால் உலக நாடுகளின் குறிப்பாக சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளின் வளப்பம் பாதிக்கப்படுவதாகத் திரு. லீ கூறினார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் வர்த்தகம் முதலிடம் வகிப்பதை அவர் சுட்டினார்.

அமெரிக்கா இராணுவ ரீதியிலும், மற்ற அம்சங்களிலும் வலுவாகத் திகழ்கிறது. சீனா வளர்ந்துவருகிறது.

இருதரப்பும் ஒன்று மற்றதன் மீது அவநம்பிக்கையைக் கொண்டிருந்தாலோ, பகைமையை வளர்த்துக்கொண்டாலோ, அது அவ்விரு நாடுகளை மட்டுமின்றி உலகம் முழுவதையும் பாதிக்கும் என்றார் திரு. லீ.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்