Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிருமித்தொற்றுக் காலத்திலும் சிங்கப்பூரும் சீனாவும் ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளன - இரு நாட்டு தலைவர்கள்

சிங்கப்பூரும் சீனாவும் கிருமித்தொற்றுக் காலத்திலும் ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளன - இரு நாட்டு தலைவர்கள்

வாசிப்புநேரம் -
கிருமித்தொற்றுக் காலத்திலும் சிங்கப்பூரும் சீனாவும் ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளன - இரு நாட்டு தலைவர்கள்

(படம்: CNA)

சிங்கப்பூரும் சீனாவும், கிருமிப்பரவல் இடையூறுகளுக்கு மத்தியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுள்ளன.

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் அவ்வாறு கூறினார்.

அதிகாரத்துவப் பயணமாகச் சிங்கப்பூர் வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயைச் (Wang Yi) சந்தித்தபோது திரு. ஹெங் அவ்வாறு சொன்னார்.

இருதரப்பு ஒத்துழைப்புக்கான 17ஆவது கூட்டு மன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஆர்வமாய் இருப்பதாக இருவரும் தெரிவித்தனர்.

வர்த்தகம், முதலீடு, மின்னிலக்கப் பொருளியல், நீடித்து நிலைத்திருக்கும் வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்களில் எவ்வாறு ஒத்துழைக்கலாம் என்பது அதில் பேசப்படும்.

புதிய துறைகளில் ஒத்துழைப்பதற்கான வழிகளும் ஆராயப்படும்.

திரு. வாங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனையும் சந்தித்தார்.

இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வழிவகைகள் பற்றி அவர்கள் பேசினர்.

பசிபிக் பங்காளித்துவத்துக்குரிய விரிவான முற்போக்கான உடன்பாட்டில் சீனா இணைய விரும்புவதையும் டாக்டர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

வட்டார, அனைத்துலக நடப்புகள் குறித்தும் இருவரும் கருத்து பரிமாறிக்கொண்டனர்.

ஆசியான் அமைப்பிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிமுறைகளையும் அவர்கள் ஆராய்ந்தனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்