Images
  • lhl
    படம்: MCI

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான சிறந்த உறவு மறுவுறுதி

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான சிறந்த உறவை பிரதமர் லீ சியென் லூங்கும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் (Wang Yi) மறுவுறுதிப்படுத்தியுள்ளனர்.

இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ள திரு. வாங், இறுதி நாளான இன்று பிரதமர் லீயைச் சந்தித்தார்.

கோவிட்-19 நோய்ப்பரவலுக்கு இடையே இருநாடுகளும் நல்ல ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதாக திரு. லீ குறிப்பிட்டார்.

வட்டார, அனைத்துலக நிலவரம் குறித்து திரு. Wangஉடன் ஆக்கபூர்வமாய்க் கலந்துரையாடியதாகத் திரு. லீ குறிப்பிட்டார்.

ஆசியான் - சீன உறவு குறித்த கலந்துரையாடலின் 30ஆம் ஆண்டு நிறைவையும் அவர்கள் வரவேற்றனர்.

உலகத்துக்குச் சீனா தொடர்ந்து பங்களிப்பதை வரவேற்பதாகச் சொன்ன திரு. லீ, ஒற்றுமையான, அமைதியான உலகை உருவாக்க சீனாவுடன் தொடர்ந்து பணியாற்றவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரிலிருந்து புறப்படும் திரு. வாங், சீனா திரும்பும்முன் தென் கொரியா செல்லவிருக்கிறார்.

முதலில், அவர் வியட்நாமுக்கும் கம்போடியாவுக்கும் சென்றிருந்தார்.

இதற்கிடையே, சிங்கப்பூருடன் மின்னிலக்க பொருளியல் பங்காளித்துவ ஒப்பந்தம் செய்துகொள்ள சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.

நியூசிலந்துடனும், சிலியுடனும் சிங்கப்பூர் அத்தகைய ஒப்பந்தம் செய்துள்ளது.

Trans-Pacific நாடுகளுக்கான விரிவான பொருளியல் பங்காளித்துவ உடன்பாட்டில் இணைய சீனா விரும்புகிறது.

அதுபற்றி அதிபர் சி ஜின்பிங்கின் (Xi Jinping) விருப்பத்தைத் திரு. வாங் வெளிப்படுத்தியதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். 

Top