Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அமெரிக்காவும் சீனாவும் பொதுவான நிலைப்பாட்டை எட்டவேண்டும்: தற்காப்பு அமைச்சர் இங்

அமெரிக்காவும் சீனாவும், சில விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தாலும், பொதுவான நிலைப்பாட்டை எட்டவேண்டும் என சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (Ng Eng Hen) கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
அமெரிக்காவும் சீனாவும் பொதுவான நிலைப்பாட்டை எட்டவேண்டும்: தற்காப்பு அமைச்சர் இங்

(படம்: CNA)

அமெரிக்காவும் சீனாவும், சில விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தாலும், பொதுவான நிலைப்பாட்டை எட்டவேண்டும் என சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (Ng Eng Hen) கூறியுள்ளார்.

அதன் மூலமே உலகின் நிலைத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்றார் அவர்.

பெய்ச்சிங்கில் இன்று நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அந்தக் கருத்துகளை அவர் தெரிவித்தார்.

வர்த்தகம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் போட்டி கடுமையாகியுள்ள நிலையில் டாக்டர் இங் அவ்வாறு கூறியுள்ளார்.

முன்னேற்றம், நிலைத்தன்மை ஆகியவற்றுடன், பாதுகாப்புச் சவால்கள், பருவநிலை மாற்றம், அணுவாயுத-பயங்கரவாத அச்சுறுத்தல் போன்ற அம்சங்களிலும் இரு வல்லரசுகளும் கவனம் செலுத்துவது முக்கியம் என்பதை அவர் சுட்டினார்.

பொதுவான நிலைப்பாட்டை எட்டுவது எளிதல்ல என்றாலும், அதற்கான முயற்சிகளை இருதரப்பும் மேற்கொள்வது அவசியம் என்றார் டாக்டர் இங்.

இருதரப்புடனும் சிங்கப்பூர் தொடர்ந்து நல்லுறவு பேணும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்கா, சீனா இரண்டில் ஒன்றின் பக்கம் சேர்வதை சிங்கப்பூர் தவிர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்