Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ நாளை சிங்கப்பூர் வருகிறார்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ  நாளை சிங்கப்பூர் வருகிறார்

வாசிப்புநேரம் -

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), நாளை சிங்கப்பூர் வரவிருக்கிறார்.

பிரதமர் லீ சியென் லூங் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் ஆகியோரை அவர் சந்திப்பார் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

திரு வாங் யீ, சிங்கப்பூரில் 2 நாட்கள் தங்கியிருப்பார்.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனையும் அவர் சந்திக்கவுள்ளார்.

மார்ச் மாதத்தில் டாக்டர் பாலகிருஷ்ணன் சீனாவின் புஜியான் (Fujian) மாநிலத்திற்குச் சென்றபோது திரு வாங் யீயைச் சந்தித்தார்.

அப்போது பயண இணைப்புகள், இரு நாடுகளும் அங்கீகரிக்கும் சுகாதாரச் சான்றிதழ்கள், மியன்மார் நிலவரம் ஆகியவை குறித்து இரு தலைவர்களும் கலந்துபேசினர்.

தென் கிழக்காசியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் திரு. வாங் யீ, வியட்நாம், கம்போடியா ஆகியவற்றுக்குச் சென்றபிறகு சிங்கப்பூர் வருகிறார்.

சீனாவுக்குத் திரும்புவதற்கு முன் அவர் தென் கொரியா செல்லவிருக்கிறார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்