Images
  • chinatown
    (படம்: Today) 

பாலியல் தொழிலுக்காக வீட்டை வாடகைவிட்டவருக்கு மூன்றரை மாதம் சிறை;$8000 அபராதம்

சைனாடவுனில் பாலியல் தொழில் நடத்துவோருக்குத் தமது வீட்டை வாடகை விட்டவருக்கு மூன்றரை மாதம் சிறைத் தண்டனையும் 8,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளிடமிருந்து எச்சரிக்கை கிடைத்ததைப் பொருட்படுத்தாது 45 வயது பே டியேன் டியேன் என்ற மாது தமது வீட்டை இரண்டு பெண்களுக்குத் வாடகைவிட்டிருக்கிறார்.

நான்கு மாதங்களில் சுமார் 9,000 வெள்ளியை அவ்விருவரிடமும் இருந்து அவர் பெற்றதாகக் கூறப்பட்டது.

அவர்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளும் கடந்த மாதம் நிரூபிக்கப்பட்டன.

அவரின் கணவர் சான் கொக் பூன்னுக்கும் 3,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

அவர்கள் தங்கள் வீட்டில் இரு அறைகளையும் சீனாவிலிருந்து வந்த சியேன் ஆன்மை, லீ ஹொங் ஜுவான் ஆகிய இருவருக்கு வாடகை விட்டிருந்தனர். 

2016ஆம் ஆண்டு அந்தப் பெண்கள் பாலியல் நடவடிக்கைகளுக்காகக் கைதுசெய்யப்பட்டனர். 

விசாரணையின்போது வாடகைக்கு இருந்த வீடு குறித்த தகவல்களை அவர்கள் அதிகாரிகளிடம் கூறினர்.

பாலியல் தொழில்வழி தங்களுக்குக் கிடைத்த பணத்தை வாடகைக்குக் கொடுத்ததாகவும் அவ்விருவரும் கூறினர்.

2014ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடையே காவல்துறை 8 முறை பே டியேன் டியேனிடம் வீட்டில் வாடகைக்கு இருந்தோரின் நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தனர்.


 

Top