Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சுவா சூ காங் சாலை விபத்தில் 6 வயதுச் சிறுவன் கடுமையாகக் காயம்

சுவா சூ காங் அவென்யூ 5இல் நடந்த சாலை விபத்தில் 6 வயதுச் சிறுவன் கடுமையாகக் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சுவா சூ காங் சாலை விபத்தில் 6 வயதுச் சிறுவன் கடுமையாகக் காயம்

(படம்: Facebook/Charlie Lim)

சுவா சூ காங் அவென்யூ 5இல் நடந்த சாலை விபத்தில் 6 வயதுச் சிறுவன் கடுமையாகக் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பையன் SMRT பேருந்துக்கு அடியில் சிக்கியிருந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

விபத்து குறித்துக் காலை 9 மணிக்குத் தகவல் கிடைத்தது.

பேருந்துக்கு அடியில் சிக்கியிருந்த சிறுவனை உரிய சாதனங்களைக் கொண்டு மீட்டு தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

பேருந்துக்கு அடியிலிருந்து சிறுவன் மீட்கப்படும்போது அவனுடைய அம்மா அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்.

நண்பர்களும், காவல்துறை அதிகாரிகளும் சிறுவனின் தாயாருக்கு ஆறுதல் கூறியதாக விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்