Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சோட்டா பீமும் நண்பர்களும் ஏன் சிங்கப்பூரில் இருக்கிறார்கள்?

"சோட்டா பீம் - சிங்கப்பூர் சாகசப் பயணம்" (Chhota Bheem - Adventures in Singapore) என்ற தலைப்பில், சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம், Voot Kids, Green Gold Animation ஆகியவை இணைந்து மெய்நிகர்த் தொகுப்பு ஒன்றை உருவாக்கியுள்ளன.

வாசிப்புநேரம் -

"சோட்டா பீம் - சிங்கப்பூர் சாகசப் பயணம்" (Chhota Bheem - Adventures in Singapore) என்ற தலைப்பில், சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம், Voot Kids, Green Gold Animation ஆகியவை இணைந்து மெய்நிகர்த் தொகுப்பு ஒன்றை உருவாக்கியுள்ளன.

(படம்: STB, Voot Kids, Green Gold Animation)

அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகத்தின் இந்திய, மத்திய கிழக்கு, தெற்காசிய வட்டார இயக்குனர் பா.ஸ்ரீதரிடம் 'செய்தி' பேசியது.

வீரச் சிறுவனான சோட்டா பீம், இந்தியச் சிறாருக்கு நன்கு தெரிந்தவன் - ஆனால் சோட்டா பீம் சிங்கப்பூருக்கு வந்தது ஏன்?

பிரபல இந்தியக் கேலிச் சித்திரமான சோட்டா பீம் தனது 11ஆவது பிறந்தநாளைக் கொண்டாட இங்கு, தன் நண்பர்களுடன் வந்துள்ளதாக மெய்நிகர் தொகுப்பின் கதை சொல்கிறது.

(படம்: STB, Voot Kids, Green Gold Animation)

சவால்மிக்கக் கிருமிப்பரவல் சூழலில் அனைவருக்கும் நட்பின் முக்கியத்துவத்தைக் கற்பிக்கவும், அனைவரையும் மகிழ்விக்கவும் தொகுப்பு அமைக்கப்பட்டது.
அதோடு, அது, சிறாருக்கு சிங்கப்பூரைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களையும் கற்பிக்க முற்படுகிறது.

சிங்கப்பூரில் சுற்றுப்பயணத்திற்கு மெருகூட்ட, ஏன் இந்தியக் கேலிச்சித்திரங்கள் பயன்படுத்தப்பட்டன?

சிங்கப்பூர், இந்தியா போன்றவற்றிலுள்ள இந்தியர்களுக்கும் இந்தியக் குடும்பங்களுக்கும் ஓர் அர்ப்பணிப்பாக "சோட்டா பீம் - சிங்கப்பூர் சாகசப் பயணம்" தொடர் அமைகிறது.

(படம்: STB, Voot Kids, Green Gold Animation)

தொகுப்பின் கதைத்தொடரில் இந்தியாவில் பிறந்த சோட்டா பீமும் நண்பர்களும் சிங்கப்பூருக்கு வந்து இங்குள்ளவற்றைப் பற்றித் தெரிந்துகொண்டு இனிய அனுபவங்களைப் பெறுகின்றனர்.

தொடரில் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம்?

"ஆர்வம் நிறைவேறும்" ("Passion Made Possible" ) என்னும் கருப்பொருளின் பின்னணியில் தொடர் அமைந்திருக்கிறது. தொடரின் மூலம் சிங்கப்பூரிலுள்ள பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பற்றிக் கற்றுக்கொள்ளலாம்.

(படம்: STB, Voot Kids, Green Gold Animation)

சிறார், பெரியோர் அனைவரும் UNESCO அமைப்பின் தொட்டுணர முடியாத கலாசார மரபுடைமைப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பூமலை, உவணவங்காடி நிலையங்கள் போன்ற இடங்களுக்குப் பாதுகாப்பாகச் செல்லலாம் - மெய்நிகர் தொடரின் மூலம்.

தொடர் சென்ற வாரயிறுதி வெளியிடப்பட்டது, அது வரும் இரு வாரங்களுக்கு வாரயிறுதி நாள்களன்று தொடரும். தொடரை Voot Kids செயலியின் மூலம் காணலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்