Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிறுவர்களுடன் சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்க வரும் சோட்டா பீம்!

சோட்டா பீமும், நண்பர்களும் சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்க வந்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
சிறுவர்களுடன் சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்க வரும் சோட்டா பீம்!

படம்: STB, Voot Kids, Green Gold Animation

சோட்டா பீமும், நண்பர்களும் சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்க வந்துள்ளனர்.

சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம், Voot Kids, Green Gold Animation ஆகியவை இணைந்து "சோட்டா பீம் - சிங்கப்பூர் சாகசப் பயணம்" (Chhota Bheem - Adventures in Singapore) என்ற மெய்நிகர்த் தொகுப்பை உருவாக்கியுள்ளன.

பிரபல இந்தியக் கேலிச் சித்திரமான சோட்டா பீமின் 11ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அந்தத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படம்: STB, Voot Kids, Green Gold Animation

(படம்: STB, Voot Kids, Green Gold Animation)

"சோட்டா பீம்" வீரச் சிறுவன் இந்தியச் சிறாருக்கு நன்கு அறிமுகமான முகம்.

அவர்களின் வாழ்க்கையில் புன்னகையூட்டவும் சிங்கப்பூரைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களைக் கற்றுத் தரவும் அந்தத் தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் அவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

படம்: STB, Voot Kids, Green Gold Animation

(படம்: STB, Voot Kids, Green Gold Animation)

கிருமிப்பரவல் சூழலில் சிங்கப்பூரைப் பாதுகாப்பாகச் சுற்றிப் பார்க்கும் அரிய வாய்ப்பையும் அத்தொகுப்பு அளிக்கிறது.

சிறுவர்களுக்கு 7 அத்தியாயங்கள் கொண்ட மின்னிலக்கக் காணொளி நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரிலுள்ள விலங்குத் தோட்டம், பூமலை போன்ற சிறந்த சில இடங்களுக்குச் சோட்டா பீமும் அவனுடைய நண்பர்களும் செல்வதைச் சித்திரிக்கும் வண்ணம் காணொளிகள் அமைக்கப்பட்டுள்ளன.

படம்: STB, Voot Kids, Green Gold Animation

(படம்: STB, Voot Kids, Green Gold Animation)

கண்கவர் காட்சிகள், சோட்டா பீமின் வீர சாகசங்கள், சிறப்பான தகவல்கள், வீட்டிலிருந்தபடியே நாட்டைச் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு - என அனைத்தையுமே "சோட்டா பீம் - சிங்கப்பூர் சாகசப் பயணம்" தொகுப்பு அளிக்கும் என நம்பப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்