Images
  • workers christmas
    (படம்:Nuria Ling/TODAY)

கிறிஸ்துமஸையொட்டிப் பரிசு மழையில் வெளிநாட்டு ஊழியர்கள்

வெயில், மழை என்று பாராமல் அயராது உழைக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பரிசு கொடுக்க நினைத்தார் 7 வயது ஷென் யுவானிங் (Shen Yuening).

தாம் சிறுகச் சிறுகச் சேர்த்துவைத்திருந்த சேமிப்பிலிருந்து 200 வெள்ளியைப் பரிசுப் பொருட்கள் வாங்கச் செலவிட்டார் ஷென்.

ஷென் போன்றவர்கள் அளித்த நன்கொடைகளைக் கொண்டு 500 வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பரிசுப் பைகளை வழங்கியது 'ItsRainingRaincoats' என்ற குழு.

ஆண்டிறுதிக் கொண்டாட்டங்களில் வெளிநாட்டு ஊழியர்களும் திளைக்க அந்தச் சிறப்பு ஏற்பாடு.

மழையின்போது அணிந்துகொள்ள raincoat, பல்பசை, தின்பண்டங்கள் போன்றவை பைகளில் வைக்கப்பட்டிருந்தன.

கிரேஞ் ரோட்டின் நிலப் போக்குவரத்து ஆணையக் கட்டுமானத் தளத்தில் கூடியிருந்த ஊழியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி.

இதை நாங்கள் வாங்கினால், ஐம்பது வெள்ளியாவது செலவாகும்

என்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ் செந்தில்குமார்.

'ItsRainingRaincoats' குழுவைக் குமாரி தீபா சுவாமிநாதன் அமைத்தார்.

2015ஆம் ஆண்டிலிருந்து தீபாவளியையொட்டிப் பரிசுப் பொருட்களை அவருடைய குழு வழங்கிவந்தது.

இந்த ஆண்டு முதல்முறையாகக் கிறிஸ்துமஸையொட்டியும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சுமார் 20,000 பரிசுகள் தயார்செய்யப்பட்டுள்ளன.

200 தொண்டூழியர்கள் இந்த மாதம் வெவ்வேறு கட்டுமானத் தளங்களுக்குச் சென்று வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பரிசுகளைக் கொடுக்கவிருக்கின்றனர்.


எங்களையும் இவர்கள் மனத்தில் கொண்டு கொண்டாட்டங்களின்போது சிறப்பு முயற்சி எடுப்பது, இங்கு ஒரு குடும்பம் இருப்பது போன்று உணரவைக்கிறது

என்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு துரை பிரசன்னா.

 

Top