Images
  • Tamil Chudar

தமிழ்ச்சுடர் 2019: வெற்றியாளர்கள்

மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தும் நிகழ்ச்சி தமிழ்ச்சுடர்.

இதன் இணை ஏற்பாட்டாளர் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு. சமூகத்துக்குப் பங்காற்றியோரை அங்கீகரிக்க நடத்தப்படும் விருது நிகழ்ச்சிக்கு இம்முறை MES குழுமம், ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடை, ஸ்ரீ விநாயாக எக்ஸ்போர்ட்ஸ் ஆகியவை ஆதரவு தந்தன.

ஷங்ரிலா ஹோட்டலில் இன்று (08 நவம்பர் 2019) நடைபெற்ற தமிழ்ச்சுடர் 2019 நிகழ்ச்சியில், கலை, கல்வி, புத்தாக்கம், இளம் சாதனையாளர், வாழ்நாள் சாதனையாளர் என 5 பிரிவுகளில் 8 விருதுகள் வழங்கப்பட்டன.

விருது வென்றவர்களின் விவரங்கள்:

வாழ்நாள் சாதனையாளர்கள்


-              க.து.மு. இக்பால்

-              நா. ஆண்டியப்பன்

இளம் சாதனையாளர்


-ஹரிணி V.

கல்வி


-              சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி


-              சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை

கலை


-              AK Theatre நாடகக் குழு


-              Athipathi International Theatre குழு

புத்தாக்கம்


 -             நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கம்

விருதுகளை வென்ற அனைவருக்கும் 'செய்தி'யின் மனமார்ந்த வாழ்த்துகள்!


Top