Images
  • pink dot
    (படம்:  REUTERS/Darren Whiteside)

ஓரினப் புணர்ச்சியாளர்களை எதிர்க்கும் சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை: சிங்கப்பூர் தேவாலயங்களுக்கான தேசிய மன்றம்

ஓரினப் புணர்ச்சியாளர்களுக்கு இடையிலான பாலியல் உறவை எதிர்க்கும் சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று சிங்கப்பூர் தேவாலயங்களுக்கான தேசிய மன்றம் கூறியுள்ளது.

ஓரினப் புணர்ச்சியாளர்களின் வாழ்க்கைச் சூழல் தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் பாதகமாக விளைவிக்கும்; ஒட்டுமொத்த சமூகத்தையும் அது பாதிக்கும் என்று நம்புகிறது.

குற்றவியல் சட்டப் பிரிவு 377Aஇன் கீழ் ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவு குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தக் குற்றத்தைப் புரிவோருக்கு ஈராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும்.

ஆனால் பெண்களுக்கு இடையிலான பாலியல் உறவுக்கு அந்தச் சட்டம் பொருந்தாது.

சிங்கப்பூரில் உள்ள 200 தேவாயாலங்களைப் பிரதிநிதித்து வரும் மன்றம், 377A சட்டத்துக்கு எதிராக மாற்றுக் கருத்து ஏதுமில்லை என்று குறிப்பிட்டுள்ளது. 

Top