Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 கிருமித்தொற்று - Grace Assembly of God தேவாலயத்தின் மூத்த பாதிரியாருக்குப் பாதிப்பு

Grace Assembly of God தேவாலயத்தின் மூத்த பாதிரியார், COVID-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19 கிருமித்தொற்று - Grace Assembly of God தேவாலயத்தின் மூத்த பாதிரியாருக்குப் பாதிப்பு

(படம்: graceaog.org)

Grace Assembly of God தேவாலயத்தின் மூத்த பாதிரியார், COVID-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

அவர் தேசியத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் செவ்வாய்கிழமை (பிப்ரவரி 11) முதல், தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகத் தேவாலயம் குறிப்பிட்டுள்ளது.

கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரில் ஏழு பேருக்கு தேவாலயத்துடன் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

அவர்களில் இருவர் பற்றி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

நேற்று மேலும் ஐவர் பாதிப்படைந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்டோரில் மூவர் தேவாலய ஊழியர்கள் என்று தெரியவந்துள்ளது.

Grace Assembly of God தேவாலயத்தின் கிளைகள், தங்லின் (Tanglin), புக்கிட் பாத்தோக் (Bukit Batok) ஆகிய வட்டாரங்களில் உள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்