Images
  • sigare
    படம்: சிங்கப்பூர் சுங்கத்துறை

வரிசெலுத்தப்படாத சிகிரெட்டுகளை வைத்திருந்த 152 பேர் கைது

சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் 3 நாள் நடத்தப்பட்ட சோதனைகளில் வரிசெலுத்தப்படாத சிகிரெட்டுகளைக் வைத்திருந்த 152 பேர் பிடிபட்டனர்.

சுமார் 170 சிகரெட் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குற்றமிழைத்தோருக்கு $500 முதல் $1,200 வரை அபராதம் விதிக்கப்பட்டது.

வர்த்தக வட்டாரங்கள், தொழில்துறை வட்டாரங்கள், குடியிருப்புப் பேட்டைகள், வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குமிடங்கள் ஆகிய இடங்களில் இம்மாதம் 10,11,13 ஆம் தேதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.

வரிசெலுத்தப்படாத ஒரு பொட்டலம் சிகிரெட் வைத்திருந்து முதல்முறையாகப் பிடிபட்டவருக்கு, 500 வெள்ளி அபராதம் விதிக்கப்படும்.  

Top