Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் கிருமித்தொற்று கொண்ட நபர்கள் சுற்றித்திரிவதாகப் பரவும் பொய்த்தகவல்

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள ஆல்பர்ட் கோர்ட் ஹோட்டலை அரசாங்கம் தனிமைப்படுத்தும் இடமாக மாற்றி 250 பேரைத் தங்க வைத்திருப்பதாகவும், அதில் சிலருக்கு COVID-19 கிருமித்தொற்று இருப்பதாகவும் பலருக்கு WhatsApp மூலம் பொய்த் தகவல் பரவி வருகிறது.

வாசிப்புநேரம் -
லிட்டில் இந்தியா வட்டாரத்தில் கிருமித்தொற்று கொண்ட நபர்கள் சுற்றித்திரிவதாகப் பரவும் பொய்த்தகவல்

(படம்: Facbook/ LiSHA)

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள ஆல்பர்ட் கோர்ட் ஹோட்டலை அரசாங்கம் தனிமைப்படுத்தும் இடமாக மாற்றி 250 பேரைத் தங்க வைத்திருப்பதாகவும், அதில் சிலருக்கு COVID-19 கிருமித்தொற்று இருப்பதாகவும் பலருக்கு WhatsApp மூலம் பொய்த் தகவல் பரவி வருகிறது.

கிருமித்தொற்று கொண்ட சிலர் அந்த வட்டாரத்தில் சுற்றித்திரிவதாகவும், அதனால் லிட்டில் இந்தியா வட்டாரத்துக்குச் செல்லவேண்டாம் என்றும் பொய்த்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய தகவல்களை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார், லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் சந்திரா.

இது போன்ற தகவல்களை நம்பவேண்டாம். அப்படிப்பட்ட எந்த ஒரு நிகழ்வும் நடக்கவில்லை. இதுபோன்ற பொய்ததகவல்களால் லிட்டில் இந்தியாவில் உள்ள கடைகளும், வாடிக்கையாளர்களும் பெருமளவு பாதிக்கப்படுவர்.

லிட்டில் இந்தியாவில் உள்ள கடைகள், Enterprise சிங்கப்பூர், சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து மக்களிடையே விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றன.

கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கிடையே இத்தகைய பொய்த்தகவல்கள் பரவுவது வருத்தமளிக்கிறது.

பொதுமக்கள் நம்பகமான தளங்களில் உள்ள தகவல்களை மட்டுமே நம்பவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சமூக ஊடகங்களில் ஒருவரிடமிருந்து பெறும் தகவலின் நம்பகத்தன்மை தெரியாமல் அதைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்