Images
  • City Harvest CHurch Accident
    (படம்: ஐஸ்வர்யா தேவி)

காவல்துறை வாகனம், மின்-ஸ்கூட்டர் விபத்து - ஆடவருக்குக் காயம்


(வாசிப்பு நேரம்: 30 விநாடிகளுக்குள்)


காவல்துறை வாகனமும் மின்-ஸ்கூட்டரும் சம்பந்தப்பட்ட விபத்தில் மின்-ஸ்கூட்டர் ஓட்டுநரான 42வயது ஆடவர் காயமடைந்தார். பயனியர் ரோடு நார்த், ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 91 சந்திப்பில் நேற்றிரவு 11.30 மணியளவில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

மின்-ஸ்கூட்டர் ஓட்டுநருக்குக் கால்களில் வலி ஏற்பட்டது. சுயநினைவோடு அவர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

காவல்துறை விசாரணை தொடர்கிறது. 

Top