Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தப்பியோட முயன்ற சிட்டி ஹார்வஸ்ட் தேவாலயத்தின் முன்னாள் தலைவர் குற்றவாளி என்று தீர்ப்பு

சியூ, சென்ற பிப்ரவரி மாதம் சட்டத்துக்கு விரோதமான முறையில் புலாவ் உபினிலிருந்து தப்பிச்செல்ல முயற்சி செய்துள்ளார்.

வாசிப்புநேரம் -
தப்பியோட முயன்ற சிட்டி ஹார்வஸ்ட் தேவாலயத்தின் முன்னாள் தலைவர் குற்றவாளி என்று தீர்ப்பு

(படம்: AFP/MOHD FYROL)

சிங்கப்பூரைவிட்டுத் தப்பியோட முயன்றதாகவும் நீதிமன்றத்தின் ஆணையை மீறி நடந்ததாகவும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய சிட்டி ஹார்வஸ்ட் தேவாலயத்தின் முன்னாள் தலைவர் சியூ எங் ஹான் (Chew Eng Han) குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

சியூ, சென்ற பிப்ரவரி மாதம் சட்டத்துக்கு விரோதமான முறையில் புலாவ் உபினிலிருந்து தப்பிச்செல்ல முயற்சி செய்துள்ளார்.

தகவல் அறிந்த கடலோரக் காவல் அதிகாரிகள் சியூவை அங்கேயே கைதுசெய்தனர்.

படகில் ஏறி மலேசியாவுக்குத் தப்பிச் செல்லவிருந்த வேளையில் சியூ பிடிபட்டார்.

அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 40 மாதச் சிறைத்தண்டையை எதிர்நோக்குவதற்கு முதல்நாள், அவர் சிங்கப்பூரைவிட்டுத் தப்பிச்செல்ல முயற்சி செய்துள்ளார்.

சிட்டி ஹார்வஸ்ட் தேவாலயத்தின் 50 மில்லியன் வெள்ளி நிதியின் கையாடல் தொடர்பில் அவருக்கு அந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்