Images
  • Clarke Quay
    (படம்: Facebook/HaiDiLao Singapore) 

அசுத்தமான உணவை விற்றதற்காகத் தற்காலிகமாக மூடப்பட்ட உணவகம்


சிங்கப்பூர்: கிளார்க் கீயில் (Clarke Quay) உள்ள பிரபல உணவகம் ஒன்று தேசிய சுற்றுப்புற அமைப்பால் இரு வாரங்களுக்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

3D ரிவர் வேலி ரோட்டில் உள்ள HaiDiLao எனும் உணவகம் கடந்த 12 மாதங்களில் 12 குற்றப்புள்ளிகளைப் பெற்றதால் மூடப்பட்டுள்ளதாக அமைப்பு அதன் இணையப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

12 புள்ளிகளில் 6 புள்ளிகள் கையுறை அணியாமல் உணவைக் கையாண்டதற்கானவை. எஞ்சிய 6 புள்ளிகள் அசுத்தமான உணவை விற்றதற்கானவை.

உணவகத்துக்கு $800 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

உணவகம் இம்மாதம் 10ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.

உணவகம் மீண்டும் திறக்கப்படுவதற்குமுன் உணவைக் கையாளும் அனைத்து ஊழியர்களும் அடிப்படை உணவுச் சுகாதாரப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியிருக்கும்.

 

Top