Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பயன்படுத்தப்பட்ட சவப்பெட்டியை காலாங் ஆற்றில் அப்புறப்படுத்திய துப்புரவாளருக்கு அபராதம்

பயன்படுத்தப்பட்ட சவப்பெட்டியை காலாங் ஆற்றில் அப்புறப்படுத்திய துப்புரவாளர் ராஜசிங்கம் ராமசாமிக்கு 2,200 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
பயன்படுத்தப்பட்ட சவப்பெட்டியை காலாங் ஆற்றில் அப்புறப்படுத்திய துப்புரவாளருக்கு அபராதம்

படம்: Google Street View

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பயன்படுத்தப்பட்ட சவப்பெட்டியை காலாங் ஆற்றில் அப்புறப்படுத்திய துப்புரவாளர் ராஜசிங்கம் ராமசாமிக்கு 2,200 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பொதுச் சுகாதாரச் சட்டத்தின்கீழ் எடை கூடுதலான பொருளை அப்புறப்படுத்தியதற்காக,  அவருக்கு அந்த அபராதம் விதிக்கப்பட்டதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.

இவ்வாண்டு மே 8ஆம் தேதி அப்பர் பூன் கெங் ரோடு அருகில் உள்ள காலாங் ஆற்றுப் பகுதியில், இரண்டு சவப்பெட்டிகள் மிதந்துகொண்டிருந்தன.

விசாரணையில் அவர் அந்தச் செயலைத் தெரிந்தே செய்ததாக ஒப்புக்கொண்டார். அவரது பொறுப்பற்ற செயலால் பொதுமக்களிடையே பதற்றம் ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்