Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கழிப்பறைத் துப்புரவாளர்களுக்கு 2021ஆம் ஆண்டிலிருந்து சம்பள உயர்வு

துப்புரவாளர்களுக்கான முத்தரப்புக் குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, கழிப்பறைத் துப்புரவாளர்களின் சம்பளங்கள் 2021ஆம் ஆண்டிலிருந்து உயரும்.

வாசிப்புநேரம் -
கழிப்பறைத் துப்புரவாளர்களுக்கு 2021ஆம் ஆண்டிலிருந்து சம்பள உயர்வு

(படம்: AFP/Roslan RAHMAN)

துப்புரவாளர்களுக்கான முத்தரப்புக் குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, கழிப்பறைத் துப்புரவாளர்களின் சம்பளங்கள் 2021ஆம் ஆண்டிலிருந்து உயரும்.

தேசியச் சுற்றுப்புற அமைப்பு இன்று (டிசம்பர் 3) வெளியிட்ட அறிக்கை அதனைத் தெரிவித்தது.

சம்பள உயர்வால் சுமார் 1,200 துப்புரவு நிறுவனங்களில் பணிபுரியும் 39,000 துப்புரவாளர்கள் பலனடைவர்.

அவர்களுக்கு வேலையிட சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான திறன் மேம்பாட்டுப் பயிற்சியுடன், அங்கீகரிக்கப்பட்ட மற்றுமொரு பயிற்சியும் கொடுக்கப்படவேண்டும் என்ற முத்தரப்புக் குழுவின் பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

"கழிப்பறைத் துப்புரவாளர்கள்" என்ற புதிய வேலைப்பிரிவு, பரிந்துரையின்கீழ் அறிமுகம் செய்யப்படும். அப்பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படும் ஊழியர்களுக்குச் சுகாதாரப் பிரிவில் வேலை செய்யும் ஊழியர்களின் அளவில் சம்பளம் உயர்த்தப்படும்.

துப்புரவாளர்கள் தங்கள் பணிகளைப் பாதுகாப்பான முறையில் செய்வது மட்டுமல்லாமல் அவர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்