Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மலேசிய ஆடவரின் கருணை மனு கவனமாகக் கருத்தில் கொள்ளப்பட்டது : உள்துறை அமைச்சு

மலேசிய ஆடவரின் மரண தண்டனைக்கு எதிரான கருணை மனு கவனமாகக் கருத்தில் கொள்ளப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -
மலேசிய ஆடவரின் கருணை மனு கவனமாகக் கருத்தில் கொள்ளப்பட்டது : உள்துறை அமைச்சு

(படம்: CNA)

மலேசிய ஆடவரின் மரண தண்டனைக்கு எதிரான கருணை மனு கவனமாகக் கருத்தில் கொள்ளப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்திருக்கிறது.

மலேசியாவைச் சேர்ந்த பன்னீர் செல்வம் கடந்த 2014ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குள் 1.8 கிலோகிராம் போதைமிகு அபினைக் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தமக்குக் கருணை வழங்குமாறு பன்னீர் செல்வம் அதிபர் ஹலிமா யாக்கோபிடம் மனு கொடுத்திருந்தார்.

அமைச்சரவையின் ஆலோசனையின்பேரில் அதிபர் ஹலிமா கருணை மனுவை நிராகரித்ததாக அமைச்சு கூறியது.

கருணை மனு தொடர்பாக மலேசிய ஊடகங்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சு பதிலளித்தது.

பன்னீர் செல்வத்திற்கு இன்று காலையில் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது. ஆனால் அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை குறித்து ஆடவரின் குடும்பத்தினருக்கு ஒரு வாரத்திற்கு முன்னரே தகவல்கள் கொடுக்கப்பட்டுவிட்டதாக அமைச்சு கூறியது.

ஆடவர் கருணை மனுவைத் தாக்கல் செய்வதற்குப் போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்