Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட சிங்கப்பூர் பலதரப்புச் செயல்முறையை மேற்கொள்ள ஆர்வம்: அமைச்சர் மசகோஸ்

பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட சிங்கப்பூர் சட்டத்துக்குட்பட்ட பலதரப்புச் செயல்முறையை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளதென்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட சிங்கப்பூர் பலதரப்புச் செயல்முறையை மேற்கொள்ள ஆர்வம்: அமைச்சர் மசகோஸ்

(படம்: MEWR)

பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட, சட்டத்துக்குட்பட்ட பலதரப்புச் செயல்முறையை மேற்கொள்ள சிங்கப்பூர் ஆர்வமாக உள்ளதென்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.

போலந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அவர், அதனைக் கூறினார்.

பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் மற்ற நாடுகளுக்கு ஆதரவளிக்க சிங்கப்பூர் கடப்பாடு கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த வகையில், தேசிய அளவில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சவால்மிக்க ஒரு திட்டத்தை சிங்கப்பூர் சமர்பித்துள்ளது.

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் வெப்ப வாயுக்களின் வெளியேற்றத்தை 2005ஆம் ஆண்டின் அளவைவிட 36 விழுக்காடு குறைப்பதே அந்த திட்டத்தின் நோக்கம்.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்