Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மருந்தகத்திலிருந்து சுமார் 100,000 வெள்ளியைக் கையாடிய ஊழியருக்குச் சிறை

மருந்தகத்திலிருந்து சுமார் 100,000 வெள்ளியைக் கையாடிய ஊழியருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மருந்தகத்திலிருந்து சுமார் 100,000 வெள்ளியைக் கையாடிய ஊழியருக்குச் சிறை

(படம்: AFP)

மருந்தகத்திலிருந்து சுமார் 100,000 வெள்ளியைக் கையாடிய ஊழியருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

43 வயது சாரினா முகமது குவாஸ் (Sahrina Mohd Ghuas) Temasek Medical Centre மருந்தகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். அவர் காசாளர் வேலைகளும் செய்தார்.

அப்போது, சாரினா விற்பனைப் பதிவுமுறையில் குறைபாடு இருந்ததைக் கவனித்தார். அதைப் பயன்படுத்திகொண்டு பணம் எடுக்கத் திட்டமிட்டார்.

2015-ஆம் ஆண்டு மே மாதத்தில், சாரினா அவ்வப்போது பணத்தைக் கையாடத் தொடங்கினார்.

2017-இல் 56 வயது சிம் சுவி சிங் (Sim Swee Ching) என்ற சக ஊழியர் சாரினாவுடன் சேர்ந்து பணம் எடுக்கத் தொடங்கினார்.

2018 ஜனவரி 5-ஆம் தேதி, மருந்தகத்தின் மருத்துவர் ஒருவர், நோயாளிகளின் பதிவுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதைக் கவனித்தார்.

இரண்டு ஊழியர்களும் மோசடி செய்து, நோயாளிகளின் பதிவுகளில் திருத்தம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சாரினாவுக்கு 16 மாதமும், சிம்முக்கு 15 மாதமும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்