Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மருந்தகத்திலிருந்து $111,000க்கும் மேல் கையாடிய ஊழியருக்குச் சிறை

வேலை செய்து வந்த மருந்தகத்திலிருந்து 111,605 வெள்ளியைக் கையாடிய ஊழியருக்கு ஓராண்டு, நான்கு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மருந்தகத்திலிருந்து $111,000க்கும் மேல் கையாடிய ஊழியருக்குச் சிறை

(படம்: Jeremy Long/ CNA)

வேலை செய்து வந்த மருந்தகத்திலிருந்து 111,605 வெள்ளியைக் கையாடிய ஊழியருக்கு ஓராண்டு, நான்கு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

44 வயது சரினா முகமது கவுஸ் (Sahrina Mohd Ghaus) ஈராண்டு காலத்தில் அந்தத் தொகையைக் கையாடியதன் தொடர்பில் இரண்டு நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

துமாசிக் மெடிக்கல் சென்டரின் (Temasek Medical Centre) யூ டீ பிரிவில் சரினாவும் 56 வயது சிம் சுவீ சிங்கும் பணிபுரிந்தனர்.

மருந்தகத்தில், நோயாளிகள் செலுத்தும் கட்டணங்களைக் கையாளும் பொறுப்பை வகித்தார் சரினா.

2015 மே மாதத்திற்கும் 2017 மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் சரினா, முறையற்ற வகையில் மருந்தகத்தின் பணத்தைக் கையாடினார்.

பிறகு 2017 மார்ச்சில் சிங்கிற்கும், பணத்தைக் கையாட அவர் கற்றுக்கொடுத்தார்.

நம்பிக்கை மோசடியில் ஈடுபட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் சரினாவுக்கு 15 ஆண்டு வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்