Images
  • close the gap between students (1)

சிரமப்படும் மாணவர்களுக்கு உதவ கூடுதல் முயற்சி தேவை: ஓங் யீ காங்

சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும், சிரமப்படும் மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவர்களை நெருக்குவதற்குப் பதிலாக சிரமப்படும் மாணவர்களுக்கு உதவும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று கல்வியமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் அதைச் செய்துவருவதாக அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

துணைப்பாட வகுப்புகளைத் தடைசெய்யலாம், பிரபலமான பள்ளிகளுக்கு வழங்கப்படும் வளங்கள் சிலவற்றை சுமாரானவை எனக் கருதப்படும் பள்ளிகளுக்கு வழங்கலாம் போன்ற சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

பிரச்சினைக்கு அதுபோன்ற ஆலோசனைகள் தீர்வல்ல என்றார் அமைச்சர் ஓங்.

சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்காமல் சிரமப்படும் மாணவர்கள் மேம்பட உதவிசெய்யவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

உதாரணத்திற்கு, கல்வியில் சிரமப்படும் மாணவர்களும் உபகாரச் சம்பளம் பெற சமமான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்;

அதற்கேற்ப உபகாரச் சம்பளத்துக்கான நேர்காணல் வழிமுறைகளைப் பொதுச் சேவை ஆணைக்குழு மாற்றிவருகிறது.

மாணவர்கள் முன்பு கல்வியில் எவ்வாறு தேர்ச்சிபெற்றனர் என்பதில் அதிகப்படியான கவனம் செலுத்தத் தேவையில்லை என்றும் அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.

Top