Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தாதிமை இல்லம், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி ஆகியவற்றில் புதிய கிருமித்தொற்றுக் குழுமங்கள்

சிங்கப்பூரில் புதிதாக இரண்டு கிருமித்தொற்றுக் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் புதிதாக இரண்டு கிருமித்தொற்றுக் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றிள் ஒன்று, ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தில் உள்ள All Saints தாதிமை இல்லமும் அடங்கும்.

மற்றொன்று, துவாஸில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி.

All Saints தாதிமை இல்லம்

10 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

அவர்களில் 9 பேர், தாதிமை இல்ல வாசிகள்.
ஒருவர், அங்கு பணியாற்றுபவர்.

11 துவாஸ் அவென்யூ 10-இல் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி

 21 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

தங்கும் விடுதியில் நடத்தப்படும் பரிசோதனை நடவடிக்கையின் மூலம் அவர்களுக்குக் கிருமித்தொற்று இருப்பது தெரியவந்தது.

அங்கு வசிக்கும் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்படும் எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இந்நிலையில், மற்ற கிருமித்தொற்றுக் குழுமங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

Ren Ci தாதிமை இல்லம்: 29 கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

Avery Lodge தங்கும் விடுதி: 82 கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

DHL விநியோகத் தொடர் நிலையம்: 58 கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

Chinatown Complex: 126 கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

Sunview Way கட்டுமானத் தளம்: 170 கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

சுகாதார அமைச்சு, 14 நோய்த்தொற்றுக் குழுமங்களைக் கண்காணித்துவருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்