Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நாளைமுதல் கட்டுமான, கப்பல் ஊழியர்களுக்குத் தடுப்பூசிப் பயண ஏற்பாட்டின் மூலம் சிங்கப்பூர் வரப் பதிவு செய்ய அனுமதி இல்லை

இன்றிரவு 11.59 மணியிலிருந்து கட்டுமான, கப்பல் துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் தடுப்பூசிப் பயண ஏற்பாட்டின் மூலம் சிங்கப்பூருக்குள் வரப் பதிவு செய்ய அனுமதி இல்லை. 

வாசிப்புநேரம் -
நாளைமுதல் கட்டுமான, கப்பல் ஊழியர்களுக்குத் தடுப்பூசிப் பயண ஏற்பாட்டின் மூலம் சிங்கப்பூர் வரப் பதிவு செய்ய அனுமதி இல்லை

படம்: Calvin Oh

இன்றிரவு 11.59 மணியிலிருந்து கட்டுமான, கப்பல் துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் தடுப்பூசிப் பயண ஏற்பாட்டின் மூலம் சிங்கப்பூருக்குள் வரப் பதிவு செய்ய அனுமதி இல்லை.

இந்தப் புதிய கட்டுப்பாடு S Pass வைத்திருப்பவர்கள், வேலை அனுமதி கொண்டவர்கள், விடுதியில் வசிக்கக்கூடிய வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்களுக்குப் பொருந்தும்.

கப்பல், கட்டுமானத் துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் அவரவர் துறைகளில் இடம்பெறுகின்ற பயணத் திட்டங்களின் மூலம் சிங்கப்பூருக்குள் வர வேண்டும். அல்லது, வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்களுக்கான பொதுப் பயண ஏற்பாட்டின் மூலம் அவர்கள் சிங்கப்பூருக்குள் நுழையலாம்.

அவர்கள் பாதுகாப்பாக சிங்கப்பூருக்குள் வந்து, மேற்கொள்ளவேண்டிய பரிசோதனைகள் போன்றவற்றை முடித்துவிட்டு அவரவர் விடுதிக்கோ, வேலையிடத்துக்கோ செல்லலாம்.

அத்தகைய செயல்முறைத் திட்டம் ஏற்கனவே நடப்பில் இருக்கிறது.

இன்றிரவு 11.59 மணிக்குமுன் ஏற்கனவே தடுப்பூசிப் பயணத்திட்டத்தின் மூலம் சிங்கப்பூருக்கு வர அனுமதி பெற்றுள்ளவர்கள் அவ்வழியாக இங்கு வர அனுமதிக்கப்படுவர்.

சிங்கப்பூரை வந்தடைந்தவுடன் PCR பரிசோதனையை மேற்கொண்டு அதற்கான முடிவுகளுக்குக் காத்திருக்கும் வேளையில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

நோய்த்தொற்று இல்லை என உறுதியானவர்கள் 5 நாள் நுழைவுத் திட்டத்தை மேற்கொள்வர். மேல்விவரம் முதலாளிகளுக்கு வழங்கப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்