Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் தனிப்பெரும் பங்களிப்பைப் பாராட்டியுள்ள சீனா

சீனப் பொருளியல் தாராளமயமானதில், சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் தனிப்பெரும் பங்களிப்பை சீனா பாராட்டியுள்ளது.

வாசிப்புநேரம் -

சீனப் பொருளியல் தாராளமயமானதில், சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் தனிப்பெரும் பங்களிப்பை சீனா பாராட்டியுள்ளது.

சீன அரசாங்கத் தொலைக்காட்சி நிறுவனமான CCTV வெளியிட்ட ஆவணப் படத்தில், திரு லீ குவான் இயூவின் பங்களிப்பு எடுத்துக்காட்டப்பட்டது.

சீனாவின் முன்னைய அதிபர் டெங் சியாவ் பிங் (Deng Xiao ping), 1978இல் சிங்கப்பூருக்கு வந்தபோது திரு. லீயைச் சந்தித்தார்.

அவர்கள் இருவரும் உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் அவற்றால் தென்கிழக்காசியாவும் சீனாவும் எவ்வாறு பாதிக்கப்படக் கூடும் என்றும் கருத்துப் பரிமாறிக்கொண்டனர்.

சிங்கப்பூர் போன்ற ஒரு பகுதியை சீனாவில் அமைப்பதற்கான சுஸோ (Suzhou) தொழில்துறைத் திட்டம் கையெழுத்தாக, அந்தப் பயணம் தூண்டுதலாக அமைந்தது.

அப்போது சிங்கப்பூரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு சில அம்சங்கள் இருப்பதைச் சீனர்கள் உணர்ந்ததாக திரு. லீ குறிப்பிட்டிருந்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்