Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிரடிச் சோதனைகளில் $100,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

சுமார் 100,000 வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருள் கடத்தலின் தொடர்பில் ஆறு சிங்கப்பூரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
அதிரடிச் சோதனைகளில் $100,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

(படம்: Central Narcotics Bureau)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூர்: சுமார் 100,000 வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருள் கடத்தலின் தொடர்பில் ஆறு சிங்கப்பூரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சோங் பகார், அப்பர் பூன் கெங், பீஷான் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் அந்தப் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சோங் பகாரில் போதைப்பொருள் கைமாறுவதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆடவர் ஒருவரின் வீட்டிலும் அவர் தங்கியிருந்த புளோக்கின் 16வது மாடியிலும் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வட்டாரத்தில் மற்றொருவரும் கைதுசெய்யப்பட்டார்.

பூன் கெங்கில் நடத்தப்பட்ட சோதனையில் இருவர் கைதாயினர். பீஷானில் நடத்தப்பட்ட சோதனையிலும் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 580 கிராம் போதைப்பொருள் 330 பேர் ஒரு வாரத்துக்குப் பயன்படுத்தப் போதுமானது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்