Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் சோதனையில் 14 வயதுச் சிறுவன் உட்பட 162 சந்தேக நபர்கள் கைது

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் சோதனையில் 14 வயதுச் சிறுவன் உட்பட 162 சந்தேக நபர்கள் கைது

வாசிப்புநேரம் -
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் சோதனையில் 14 வயதுச் சிறுவன் உட்பட 162 சந்தேக நபர்கள் கைது

படம்: CNB

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள் நடத்திய இரு வாரச் சோதனையில் 14 வயதுச் சிறுவன் உட்பட 162 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்தச் சிறுவன் போதைப்பொருள் புழங்கி என நம்பப்படுகிறது.

இம்மாதம் 14ஆம் தேதியிலிருந்து இன்றுவரை தீவின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சுமார் 260,500 வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பீச் ரோட்டில் நடந்த சோதனையில் இரு ஹோட்டல் அறைகளில் 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களது அறைகளில் 122 பொட்டலங்களில் 858 கிராம் போதைமிகு அபின், 133 கிராம் ஐஸ், 104 எக்ஸ்டசி மாத்திரைகள் போன்றவற்றுடன் ஒரு கத்தியும் கைப்பற்றப்பட்டது.

அதே நாளில் 35 வயது சந்தேக நபர் தனது 12 வயது மகனுடன் அங்கு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அந்தச் சிறுவனுக்கு முன்பாக போதைப்பொருள்கள் வெளிப்படையாக வைக்கப்பட்டன என்றும் CNB தகவல் அளித்தது.

அந்தச் சிறுவனின் தாயாரும் அதே நாளில் கைதுசெய்யப்பட்டார்.

விசாரணை தொடர்கிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்