Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேவாலயங்களில் நேர்ந்த COVID-19 சம்பவங்களுக்குக் காரணம் சீனப் புத்தாண்டுச் சந்திப்பு

Grace Assembly of God, The Life Church and Missions Singapore ஆகிய 2 தேவாலயங்களிலும் ஏற்பட்ட கோவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்களுக்கும் தொடர்பிருப்பதைச் சுகாதார அமைச்சு உறுதிசெய்துள்ளது.

வாசிப்புநேரம் -
தேவாலயங்களில் நேர்ந்த COVID-19 சம்பவங்களுக்குக் காரணம் சீனப் புத்தாண்டுச் சந்திப்பு

(படம்: TODAY/Yong Jun Yuan)

Grace Assembly of God, The Life Church and Missions Singapore ஆகிய 2 தேவாலயங்களிலும் ஏற்பட்ட கோவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்களுக்கும் தொடர்பிருப்பதைச் சுகாதார அமைச்சு உறுதிசெய்துள்ளது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றுக்கு ஆளான 66ஆவது நபர் ^சென்ற மாதம் 25ஆம் தேதி சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம் ஒன்றில் கலந்துகொண்டார்.

கடந்த மாதம் 29ஆம் தேதி அறிகுறிகள் தென்பட்ட பிறகு, அவர் Grace Assembly of God தேவாலயத்தில் பணிபுரியச் சென்றார்.

கிருமித்தொற்றுக்கு ஆளான 83ஆவது, 91ஆவது நபர்களும் அவருடன் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் இருந்திருக்கின்றனர்.

கணவன் மனைவியான அவர்கள் சென்ற மாதம் 19ஆம் தேதி The Life Church and Missions Singapore தேவாலயத்திற்குச் சென்றிருக்கின்றனர்.

அன்று கிருமித்தொற்றுக்கு ஆளான வூஹானிலிருந்து இங்கு வந்த^ 8ஆவது 9ஆவது நபர்களும் தேவாலயத்தில் இருந்திருக்கின்றனர்.

அவர்களிடமிருந்து தம்பதிக்குக் கிருமி தொற்றியிருக்கலாம்.

சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது அந்த இருவரிடமிருந்து இருவர் இடமிருந்து 66ஆவது நபரைக் கிருமி தொற்றியிருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்க் காவல்துறையின் உதவியோடு தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்