Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரர்களிடையே உறவை வலுப்படுத்திய ஸ்ரீ மாரியம்மன் ஆலயச் சீனப்புத்தாண்டு விருந்து

சவுத் பிரிட்ஜ் ரோட்டில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. ஆலயத்தின் ஏற்பாட்டில் இன்று (ஜனவரி 18) சிறப்பு Lo Hei விருந்து நடைபெற்றது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரர்களிடையே உறவை வலுப்படுத்திய ஸ்ரீ மாரியம்மன் ஆலயச் சீனப்புத்தாண்டு விருந்து

படங்கள்: ஷரளா தேவி

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சவுத் பிரிட்ஜ் ரோட்டில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. ஆலயத்தின் ஏற்பாட்டில் இன்று (ஜனவரி 18) சிறப்பு Lo Hei விருந்து நடைபெற்றது.

சைனாடவுன் பகுதிக் குடியிருப்பாளர்கள், முதியோர், அடித்தள அமைப்பு உறுப்பினர்கள் எனப் பலர் இவ்வாண்டு விருந்தில் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக  தஞ்சோங் பகார் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யொங் கலந்துகொண்டார்.

வசதி குறைந்தோருக்குக் கைகொடுப்பதோடு சிங்கப்பூரர்களிடையே உறவை வலுப்படுத்துவதும் நிகழ்ச்சியின் நோக்கம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் சைனாடவுனில் வசிப்போரிடையே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வாய்ப்பளிப்பதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் கூறினார்.

சைவ Lo Hei விருந்துடன், சிங்க நடனமும், பல்லின இசை நிகழ்ச்சியும் பார்வையாளர்களை மகிழ்வித்தன.

மூத்தோருக்கு சிவப்பு அன்பளிப்பு உறைகளும் வழங்கப்பட்டன.

விருந்து குறித்த சிறப்புத் தொகுப்பை இன்றிரவு 8.30 மணிச் செய்தியில் காணலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்