Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தொடக்கப்பள்ளி மேல்நிலை மாணவர்களுக்குக் கட்டாயமாகும் கணினி நிரலாக்க (coding) வகுப்புகள்

சிங்கப்பூரின் மின்னிலக்க உருமாற்றப் பயணம் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருப்பதை தொடர்பு, தகவல் அமைச்சு உறுதிசெய்யவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
தொடக்கப்பள்ளி மேல்நிலை மாணவர்களுக்குக் கட்டாயமாகும் கணினி நிரலாக்க (coding) வகுப்புகள்

(படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

சிங்கப்பூரின் மின்னிலக்க உருமாற்றப் பயணம் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருப்பதை தொடர்பு, தகவல் அமைச்சு உறுதிசெய்யவிருக்கிறது.

அதன் ஓர் அங்கமாக,தொடக்கப்பள்ளி மேல்நிலை மாணவர்கள் அடுத்த ஆண்டிலிருந்து கணினி நிரலாக்க (coding) வகுப்புகளுக்குச் செல்வது கட்டாயமாக்கப்படும்.

தொடர்பு, தகவல் அமைச்சின் வேலைத்திட்டக் கருத்தரங்கில் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் இன்று அதனைத் தெரிவித்தார்.

ஒவ்வொரு சிங்கப்பூரரும் மின்னிலக்க அறிவுடன், அன்றாட வாழ்வில் தொழில்நுட்பத்தின் நன்மைகளால் பலனடைவதை உறுதிசெய்ய அரசாங்கம் விரும்புகிறது என்று அமைச்சர் ஈஸ்வரன் கூறினார்.

Code for Fun எனும் திட்டம் அடுத்த ஆண்டு அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும் நடப்புக்கு வரும்.

அதற்கு முன்னர், இந்த ஆண்டு இறுதியில் சில பள்ளிகளில் அது வெள்ளோட்டம் காணும்.

10 மணி நேர வகுப்பில் மாணவர்களுக்கு கணினி நிரலாக்கம் குறித்த அடிப்படை அம்சங்கள் எளிமையான முறையில் கற்றுத்தரப்படும் என்று அமைச்சர் ஈஸ்வரன் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்