Images
  • cars
    படம்: Jeremy Long

சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் 9 ஆண்டுகளில் ஆகக் குறைவு

வாகன உரிமைச் சான்றிதழ்களுக்கான ஏலத்தில், பெரும்பாலான பிரிவுகளில் கட்டணம் குறைந்துள்ளது. அதில் சிறிய கார்களுக்கான கட்டணம் சுமார் ஒன்பது ஆண்டுகளில் ஆகக் குறைவானது.

சிறிய கார்களுக்கான கட்டணம் 25,000 வெள்ளியிலிருந்து 23,568 வெள்ளியாகக் குறைந்தது. 2010ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் அது 20,802 வெள்ளியாகப் பதிவானது. 


பெரிய கார்களுக்கான கட்டணம் 31,101 வெள்ளியிலிருந்து 31,001 வெள்ளிக்கு இறங்கியது.

பொதுப் பிரிவில் கட்டணம் 30,959 வெள்ளியிலிருந்து 30,851 வெள்ளியாகக் குறைந்தது.

மோட்டார் சைக்கிள்களுக்கான உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் கூடியது.

2,989 வெள்ளியாக இருந்த அந்தக் கட்டணம் 3,399 வெள்ளியாக உயர்ந்தது.

சரக்கு வாகனம், பேருந்து உள்ளிட்ட வர்த்தக வாகனங்களுக்கான சான்றிதழ்க் கட்டணம் 27,509 வெள்ளியிலிருந்து 27,009 வெள்ளியாகக் குறைந்தது.

இந்த ஏலத்தில் மொத்தம் 5,119 வாகன உரிமைச் சான்றிதழ்கள் வெளியிடப்பட்டன. அவற்றைப் பெறுவதற்காக 6,950 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

Top