Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாதாரண காப்பிக்குப் பதிலாக இந்தப் புதுவிதக் காப்பிகளைச் சுவைத்துப் பாருங்கள்

உள்ளூர்க் காப்பிப் பிரியர்கள் செல்ல வேண்டிய இடங்கள்!

வாசிப்புநேரம் -
சாதாரண காப்பிக்குப் பதிலாக இந்தப் புதுவிதக் காப்பிகளைச் சுவைத்துப் பாருங்கள்

(படம்: Facebook.com/TheCoffeeAcademicsSg)

சிங்கப்பூர்: சுண்டியிழுக்கும் நறுமணம், சிந்தையை மயங்க வைக்கும் சுவை, காப்பிப் பிரியர்களைக் கேட்டால் அதன் நன்மைகளை அவர்கள் அடுக்கிக்கொண்டே செல்வர்.

உள்ளூர்க் காப்பிப் பிரியர்கள் சிலர் காப்பி அருந்தும் அனுபவத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அதைச் சுவைத்துப் பார்த்தார் சேனல் நியூஸ்ஏஷியாவின் மே சியா.

1) எஸ்பிரெஸ்ஸோ டானிக், $8, PUNCH உணவகம்

எஸ்பிரெஸ்ஸோ எனும் வரக் காப்பியுடன் டானிக் பானம் சேர்ந்த கலைவை இது. வெப்பமான சிங்கப்பூரில் இந்த ஜிலு ஜிலு பானத்தை நீங்கள் அருந்தலாம்.

32 நார்த் கேனல் ரோடு. www.punch.sg

2) மதுபானம் கலந்த காப்பி, $16, LIBERTY COFFEE உணவகம்

காலையில் மட்டுமே காப்பி அருந்தும் பழக்கத்தைச் சற்று மாற்றியுள்ளது இந்த உணவகம். "Slow Fashioned" என்றழைக்கப்படும் இந்தக் காப்பி கலந்த பானத்தில் பர்பன், அதிக நேரம் ஊற வைத்துத் தயார் செய்யப்பட்ட காப்பி, சாக்லேட் ஆகியவை கலந்துள்ளன.

387 ஜாலான் புசார். https://libertycoffee.sg

3) தேங்காய் காப்பி, $6, FREE THE ROBOT உணவகம்

காப்பியில் பசும்பால் சேர்ப்பது வழக்கம், ஆனால் இந்த உணவகத்தில் பாலுடன், சுயமாகப் பிழியப்பட்ட தேங்காய்ப் பாலையும் சேர்க்கின்றனர். ஆரோக்கியமான கொழுப்புச் சத்து கொண்ட தேங்காய்ப் பாலில் ஞாபகச் சக்தியை அதிகரிக்கும் தண்மை உள்ளது.

118 தெலுக் ஆயர் ஸ்டிரீட். www.facebook.com/Freetherobot

4) காப்பி எலுமிச்சைச் சாறு, $8, THE COFFEE ACADEMICS உணவகம்

ஒவ்வொரு மாதமும் புதுவிதக் காப்பி பானங்களைத் தயாரிக்கிறது இந்த உணவகம். இம்மாதம் அங்குள்ள சிறப்பு பானம் காப்பி எலுமிச்சை சாறு. எலுமிச்சை சாற்றுடன் காப்பியைக் கலந்து அதில் ஐஸ் கட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கேட்க விநோதமாக இருந்தாலும் குடிக்க இது சுவையாக இருக்கும் என்று ஆணித்தரமாகக் கூறுகின்றனர் கடை உரிமையாளர்கள்.

ராஃபிள்ஸ் சிட்டி, 252 நார்த் பிரிட்ஜ் ரோடு, #B1-12, ஸ்காட்ஸ் ஸ்குவேர், 6 ஸ்காட்ஸ் ரோடு, #02-01/02. www.facebook.com/TheCoffeeAcademicsSg

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்