Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காப்பி அருந்துவதைத் தவிர காப்பியால் என்ன நன்மைகள்?

காலையில் எழுந்ததும் ஒரு குவளை காப்பியை அருந்தவில்லை என்றால் சிலருக்கு அன்றைய தினம் கையும் ஓடாது, காலும் ஓடாது.

வாசிப்புநேரம் -
காப்பி அருந்துவதைத் தவிர காப்பியால் என்ன நன்மைகள்?

(படம்: Pixabay)

காலையில் எழுந்ததும் ஒரு குவளை காப்பியை அருந்தவில்லை என்றால் சிலருக்கு அன்றைய தினம் கையும் ஓடாது, காலும் ஓடாது.

ஆனால் காப்பி பானமாக மட்டுமல்லாமல் பல விதங்களிலும் நமக்கு பயனளிக்கலாம்!

1. குளிர்பதனப் பெட்டியில் இருக்கும் வாடையை நீக்குவது

மீன், இறைச்சி போன்றவற்றை வைப்பதால் குளிர்பதனப் பெட்டியிலிருந்து துர்நாற்றம் வீசுகின்றதா? அரைத்த காப்பிக் கொட்டைகளை ஒரு குவளையில் வைத்து அதனை குளிர்பதனப் பெட்டியில் வையுங்கள். துர்நாற்றம் நீங்கிவிடும்.

2. செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்துவது

(படம்: Pixabay)

சில செடிகள் அமிலத் தன்மை கொண்ட மண்ணில்தான் நன்கு வளரும். அத்தகைய செடிகளுக்கு காப்பிக் கொட்டைகளிலிருக்கும் கால்சியம், மக்னீசியம், நைட்ரோஜன் (calcium, magnesium,nitrogen) ஆகியவை ஊட்டம் தரும்.

3. பூச்சிகள் வருவதைத் தடுப்பது

நத்தைகள், பூச்சிகள் போன்றவற்றிற்குக் காப்பி பிடிக்காது. இதனால் அவற்றிடமிருந்து செடிகளைக் காப்பாற்ற அவற்றைச் சுற்றிலும் காப்பிக் கொட்டைகளைப் போட்டுவைக்கலாம். வீட்டுக்கு அருகில் உள்ள எறும்புப்புற்றைக் களைக்கவும் அவற்றின் மேல் காப்பிக் கொட்டைகளைப் போட்டுவைக்கலாம்.

4. மரச்சாமன்களிலுள்ள கீறல்களைப் போக்குவது

(படம்: Pixabay)

வீட்டில் இருக்கும் மரச்சாமன்களில் கீறல்கள் விழுவது இயல்பு. அவற்றை நீக்க காப்பிக் கொட்டைகளைப் பயன்படுத்தலாம். கீறல் விழுந்த இடங்களில் காப்பிக் கொட்டைகளை வைத்துத் தேய்க்கலாம். 5இலிருந்து 10 நிமிடங்களுக்குப்பின் காப்பிக் கொட்டையால் தேய்க்கப்பட்ட இடத்தை ஒரு துணியால் துடைத்தால் போதும், மரச்சாமன்கள் புதுப்பொலிவு பெறும்!

5. கூந்தலுக்கு மெருகூட்டுவது

காலையில் தேவைக்கு அதிகமாகக் காப்பி செய்துவிட்டீர்களா? மீதமிருக்கும் காப்பி ஆறியதும் அதைக் கொண்டு உங்கள் கூந்தலைக் கழுவுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்தால் கூந்தல் மினுமினுப்புடன் அழகாக இருக்கும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்