Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் தட்பநிலை 22 டிகிரி செல்சியசுக்குக் கீழ்!

காற்றுடன் கூடிய கன மழையை எதிர்பார்க்கலாம் என்றும் அமைப்பு கூறியது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் தட்பநிலை 22 டிகிரி செல்சியசுக்குக் கீழ்!

(படம்:AFP/Roslan Rahman)

சிங்கப்பூரில் இன்று வெப்பநிலை வழக்கத்துக்கு மாறாகச் சற்று குளிராகவே இருப்பதாய்த் தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

தென் சீனக் கடலிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள பருவமழையின் தாக்கம் குறித்தும் அமைப்பு எச்சரித்தது.

அங் மோ கியோ, Pulau Ubin வட்டாரங்களில் வெப்பநிலை 22 டிகிரி செல்சியசுக்குக் குறைவாகப் பதிவானது.

 வேறு பகுதிகளிலும் 23 டிகிரி செல்சியசுக்குக் குறைவாகவே காலை சுமார் 7 மணியளவில் பதிவாகியிருந்ததாக வானிலை ஆய்வகம் கூறியது.

(படம்:Meteorological Service Singapore)

 அடுத்த சில நாட்களுக்குப் பருவமழை தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

காற்றுடன் கூடிய கனத்த மழையை எதிர்பார்க்கலாம் என்றும் அமைப்பு கூறியது.

தட்ப-வெப்பநிலை 22 டிகிரி செல்சியசுக்கும் 28 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்