Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிப்புறத்தில் உடல்நிலையைக் குளிர்ச்சியாக வைத்துகொள்ள உதவும் புதிய தொழில்நுட்பம்

வெளிப்புறத்தில் உடல்நிலையைக் குளிர்ச்சியாக வைத்துகொள்ளும் வழியை Singapore-ETH நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குளிர்சாதன முறையை அது சார்ந்திருக்காது. 

வாசிப்புநேரம் -
வெளிப்புறத்தில் உடல்நிலையைக் குளிர்ச்சியாக வைத்துகொள்ள உதவும் புதிய தொழில்நுட்பம்

படம்: Singapore-ETH Centre

வெளிப்புறத்தில் உடல்நிலையைக் குளிர்ச்சியாக வைத்துகொள்ளும் வழியை Singapore-ETH நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குளிர்சாதன முறையை அது சார்ந்திருக்காது. 'Cold Tube' என்று அழைக்கப்படும் அது, எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கொண்டது.

கூடிய விரைவில் அந்தத் தொழில்நுட்பத்தைப் பேருந்து நிறுத்தங்கள், உணவங்காடி நிலையங்கள், கூரை வேயப்பட்ட நடைபாதை ஆகியவற்றில் பயன்படுத்த ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

சிறு மாற்றங்களைச் செய்த பின்னர், 'Cold Tube' தொழில்நுட்பத்தை வகுப்பறை, அலுவலகம் ஆகிய உள்ளிடங்களிலும் பயன்படுத்த முடியும்.

12 உறுப்பினர்கள் கொண்ட குழு, கடந்த ஆண்டிலிருந்து அந்தப் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுவந்துள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்